அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..

 
தலைமை செயலகம்

அரசுப் பணியாளர்களின்  வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் படி அரசு ஊழியர்களுக்கு  மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது பொதுத்துறை நிறுவனாமாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெணி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்


 தமிழக அரசுப் பணியாளார்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் அவர்களது மகன்கள் மற்றும்  மகள்கள் பயன்பெறும் வகையில் விரைவில் ஆணை வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மேலும் இந்த தீட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் எளிதாக பயன்பெற ஏதுவாக தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்  என்றும் அவர் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.  இதுகுறித்த அரசாணையையும்  அரசு நேற்று வெளியிட்டது.

மருத்துவக் காப்பீடு  - அரசாணை