பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிரணி கைது- ஹெச்.ராஜா கண்டனம்

 
h.raja

பழனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததும், பேரணி புறப்படும் இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரை நிறுத்தி பேரணியில் பங்கேற்க வரும் பாஜக மகளிரணி பொறுப்பாளர்களை கைது செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

s

இதுதொடர்பாக ஹெச். ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுகவை சேர்ந்த ஞானசேகரன் என்கிற சமூக விரோதியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து தமிழக அரசும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி... தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி இன்று துவங்க இருந்த நீதி கேட்கும் பேரணியில் பங்கேற்க பழனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததும், பேரணி புறப்படும் இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரை நிறுத்தி பேரணியில் பங்கேற்க வரும் பாஜக மகளிரணி பொறுப்பாளர்களை கைது செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 



தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான PFI க்கு ஆதரவாக விசிக மற்றும் நாதக கட்சிகள் தமிழகம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தியபோது அதை அனுமதித்தது காவல்துறை..!!  அதுபோல கோவையில் குண்டு வைத்து 58 அப்பாவி மக்களை கொடூரமாக படுகொலை செய்த குண்டு கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பயங்கரவாதி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து 2000 காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி அந்த ஊர்வலத்தில் பயங்கரவாத ஆதரவு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதி அளித்தது காவல்துறை..!!  மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அறிவித்த போது இஸ்லாமிய இயக்கங்கள் ஷாகீன் பாக் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் அனுமதியின்றி நிரந்தரமாக கூடாரம் அமைத்து பலநாட்கள் போராட்டம் நடத்திய போது அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து அமைதியாக வேடிக்கை பார்த்த காவல்துறை..!! பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதி கேட்டு பேரணி நடத்த அனுமதி மறுத்து பாஜகவை சேர்ந்த தாய்மார்களையும், சகோதரிகளையும் கைது செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது..!! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.