கூண்டோடு தப்பித்த குற்றவாளிகள், மக்களே உஷார்!- ஹெச். ராஜா எச்சரிக்கை

 
h.raja

தமிழகத்திற்கு சட்டவிரோதமாக குடியேறிய 75 வங்கதேச குற்றவாளிகளைக் கூட முறையாக கண்காணிக்க முடியவில்லை என பாஜக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சாடியுள்ளார்.

h.raja

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “கூண்டோடு தப்பித்த குற்றவாளிகள், மக்களே உஷார் !  தமிழகத்திற்கு சட்டவிரோதமாக குடியேறிய 75 வங்கதேச குற்றவாளிகளைக் கூட முறையாக கண்காணிக்க முடியவில்லை, இதில் “எந்தக்கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி” என்ற வெற்றுப் பெருமை வேறு. 


திமுக-வின் வண்டவாளங்களை அம்பலப்படுத்தி இந்த அநீதி அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்கள், எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், என்ன பொய் வழக்கு போட்டு அவர்களைக் கைது செய்யலாம் என்பதையே எந்நேரமும் சிந்திக்கும் தமிழக முதல்வருக்கு, கையில் அகப்பட்ட குற்றவாளிகளைக் கண்காணிக்க தோன்றவில்லையா? பென்சிலைத் தொலைத்த பள்ளிக் குழந்தைகள் போல, பிணையில் விடுதலையான வங்கதேசக் குற்றவாளிகளைக் காணவில்லை அவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை எனக் கூற திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.