தமிழகம் ரூ.8.33 லட்சம் கோடி கடன்கார மாநிலமாக இருப்பது ஏன்?- ஹெச்.ராஜா

 
h.raja

தமிழகம் ரூ.8.33/- லட்சம் கோடிக்கு கடன்கார மாநிலமாக திவால் நிலையில் இருப்பது ஏன்? அதற்குக் காரணமானவர்கள் யார்? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

h.raja

இதுதொடர்பாக ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதற்குக் காரணம் திராவிட இயக்கங்களும், திராவிட மாடல் ஆட்சியும் தான் என்று தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், திமுக அமைச்சர்களும் மேடைகள் தோறும் முழங்கி வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பது உண்மையானால்? தமிழக முதல்வரும், திமுக அமைச்சர்களும் சொல்வது உண்மையானால்? தமிழகம் ரூ.8.33/- லட்சம் கோடிக்கு கடன்கார மாநிலமாக திவால் நிலையில் இருப்பது ஏன்? அதற்குக் காரணமானவர்கள் யார்?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கடனில் இருக்கிறது..!!  தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடனில் இருக்கிறது..!! ஆனால் தமிழகத்தை 6 முறை ஆட்சி செய்த திராவிட முன்னேற்ற கழகம் மட்டும் எப்படி எப்போதுமே செழிப்பாக இருக்கிறது?  பதில் சொல்வாரா தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.