நான் விஜய்க்கு துணையாக நிற்பேன் - ஹெச். ராஜா

 
Hraja vijay

நான் விஜய்க்கு துணையாக நிற்பேன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா  தெரிவித்துள்ளார்.

h.raja

பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா நடிப்பில் உருவாகியுள்ள கந்தன் மாலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் அவருக்கு தான் துணையாக நிற்பேன். பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று விஜய் பாடியதில் என்ன தவறு?


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நான்கு மணி நேரம் பிரச்சாரக் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஒரு குற்றமா? வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் அந்த இடத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் சென்றாரா? விசிக என்பது விழுப்புரத்திலும் சிதம்பரத்திலும் சீட்டு வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி. பொதுவாக சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்கு வரும் சூழலில் அரசியல் இருந்து கொண்டு நான் சினிமாவில் நடிக்கிறேன். ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே திரைப்படத்தில் நடிக்கிறேன்” என்றார்.
...