“தற்குறிகளுக்கு பிரச்சனைகள் புரிவதில்லை”- விஜய்யை விமர்சித்த ஹெச். ராஜா

 
H Raja vijay

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பிரச்சனை எழுந்து வரும் நிலையில் இன்று திருப்பரங்குன்றம் வருகை தந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கட்சி நிர்வாகிகளுடன் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்றார். தரிசனம் செய்துவிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

h.raja

அப்போது பேசிய ஹெச்.ராஜா, “மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்துள்ளேன். திருப்பரங்குன்றம் மலை தொடர்பான இந்த வழக்கு பல நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு 1931 ஆம் ஆண்டு லண்டன் கவுன்சில் திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தமானது தீர்ப்பு உள்ளது. தலவிருட்ச மரமான மலை மேல் உள்ள கள்ளத்தி மரத்தில் பிறை கொடி கட்டி மோதலை உருவாக்க திட்டமிட்டு சதி செய்வதாக சந்தேகம் ஏற்படுகிறது. 1931-ஆம் ஆண்டு தீர்ப்பில் அன்றைய நிலையே தொடர வேண்டுமென கூறியுள்ளார்கள். ஶ்ரீகந்தர்மலையை சிக்கந்தர் மலை எனக் கூறி பாராளுமன்ற உறுப்பினர் மலை மீது அமர்ந்து அசைவ உணவு உண்டுள்ளார். மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர் உண்மையில் மனித நேயமே இல்லாத கட்சி தான் அது. அல்ஃ உமாவுடன் தொடர்புடைய கட்சிதான் மனிதநேய மக்கள் கட்சி. இந்த விவகாரத்தில் மாநில அரசாங்கம் எந்த விதத்திலும் பாரபட்சம் காட்டாமல் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலை மேல்ஆடு வெட்டுவேன் என்று கூறுவது  இந்துக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்திற்கு அறைகூவல். அம்பேத்கர் அன்று சொன்னது இப்போது நடந்திருக்கிறது, எனவே தேசபக்தியுள்ள அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். முதலில் மணப்பாறை எம்எல்ஏவையும் நவாஸ் கனியையும் கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நான் முன்னேற்றத்துக்கு எதிரானவன் அல்ல என்று விஜய் பேசுகிறார். விமான நிலையம் வேண்டும், ஆனால் பரந்தூரில் வேண்டாம் என்கிறார். விஜய் விமான நிலையத்தை எங்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தம் வாங்கி கொடுத்தால், மத்திய அரசு அங்கு விமான நிலையம் அமைக்கும். எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்சினைகள் புரிவதில்லை” என விமர்சனம் செய்துள்ளார்.