சிந்தனையில் தெளிவு இல்லை! விஜய் குழப்பத்தில் இருக்கிறார்- ஹெச். ராஜா

 
h.raja

தமிழகத்தில் 10,000 போலி பேராசிரியர்கள் இருக்கின்றனர் என பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

h.raja

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தந்த தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 10 ஆயிரம் போலி பேராசிரியர்கள் இருக்கின்றனர். 294 பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக உள்ளனர். இதனை துணை வேந்தரே கூறுகிறார். ஒரு நபர் 11 கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருக்கிறார். ஆதார் கார்டை போலியாக செய்து இப்படி பேராசிரியர்களாக வந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் 1500 அரசு பள்ளிகளில் ஒன்றிலிருந்து எட்டு வரை 1-8 வரை வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணில் வருகிறது. பல பள்ளிகள் தமிழகத்தில் மூடும் நிலையில் வந்துள்ளது” என்றார்.

நடிகர் விஜய் கட்சி குறித்த கேள்விக்கு, சிந்தனையில் தெளிவு இல்லை, ஒரு அரசியல் கட்சிக்கு செயல்பாட்டில் தெளிவு இருக்க வேண்டும்.  தேசியவாதியாக இருக்கிறீர்களா? அல்லது பிரிவினை வாதியாக இருக்கிறீர்களா என்று கொள்கை முடிவு இருக்க வேண்டும். மொத்தத்தில் விஜய் குழப்பத்தில் இருப்பதாக சாடினார்.