ராமர் கோவில் குடமுழுக்கு அன்று கோவில்களில் பூஜை நடத்தக்கூடாது என நிர்பந்தம்- ஹெச். ராஜா புகார்

 
h.raja

ராமர் கோவில் குடமுழுக்கு அன்று கோவில்களில் பூஜை நடத்தக்கூடாது என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வலியுறுத்துவதாக ஹெச்.ராஜா புகார் கூறியுள்ளார்.

h.raja

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, “500 ஆண்டுகளுக்கு பின் இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி ராமர் கோவில் குடமுழுக்கு. இதனையொட்டி, 22-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய இந்துக்கள் முடிவு செய்துள்ளார்கள். தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கோவில்களில் பூஜை நடத்தக் கூடாது என வலியுறுத்துவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. கடையநல்லூரில் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவில், மயிலாடுதுறை கோவில், வடுவூர் கோவில்களில் இருந்தும் இது போன்று பல இடங்களில் இருந்தும் புகார்  வந்துள்ளது.

அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன். நடை திறந்திருக்கும் போது பூஜை செய்வதில் என்ன தவறு? எனவே கோவில்களை போராட்ட களமாக மாற்ற வேண்டாம். கிளாம்பாக்கத்தில் இருந்த கோவிலை இடித்ததே இந்து விரோத அரசு. மத்திய அரசுக்கு மாநிலங்களை பிரிக்கும் அதிகாரம் உண்டு. பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி மகன் குடும்ப வழக்கு விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகளையும் அதன் தலைவர் திருமாவளவனையும் பணம் சம்பாதிக்கின்றனர். அதிகார பதவிக்காக உள்ள கட்சி விசிக” என கடுமையாக சாடினார்.