தமிழர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட லாயக்கில்லை- ஹெச்.ராஜா

 
h.raja

சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா பங்கேற்று பேசினார். 

h

ஹெச். ராஜா திருமாவளவன் குறித்து அவதூறாக பேசி வருவதாக கூறி, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசிக்கொண்டிருந்தபோது, சாலை வழியே பைக்கில் சென்ற ஒருவர் ஹெச். ராஜாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு பைக்கில் பறந்து விட்டார். அதைக் கேட்டு பாஜக தொண்டர்கள் குரல் வந்த திசையை நோக்கி வேகமாக சென்றனர். 

அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த ஹெச். ராஜா பாஜக தொண்டர்களை அமைதியாக இருக்குமாறும், சத்தமிட்டவரை போலீசார் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் நம்மை விட சிறப்பாக கவனிப்பார்கள் என்று கூறி பாஜகவினரை அமைதிப்படுத்தினார். முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி பிரமுகர் செல்விமுருகன் என்பவர், அங்கு சென்று ஹெச்.ராஜாவுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி அழைத்துச் செல்லினர். இதனால் பாஜக கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு பிரச்சாரத்தின்போது, புலம்பெயர் தமிழர்கள் குறித்து என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். இதை கோடிட்டு காட்டிய காரணத்தால் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையை தொட்டால் தமிழ்நாடு தாங்காது. தமிழ்நாடு மது மாநிலமாக மாறிவிட்டது. தமிழன், தான் பொண்டாட்டிக்கு குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட லாயகில்லாமல் ஆக்கியது இந்த டாஸ்மாக்தான்.” என்றார்.