வாஸ்துபடி படிக்கும் அறையும், படுக்கை அறையும் அமைப்பது எப்படி?

 
1

மனிதர்களாக பிறந்த அனைவருமே வாழ்க்கைக்கு தேவையான செல்வம் ஈட்ட உழைக்கின்றனர். இப்படி உழைக்கின்ற அனைவருக்குமே உடல் மற்றும் மன ஓய்வு அவசியமாகும். இத்தகைய ஓய்வை மனிதனின் அத்தியவசிய தேவையில் ஒன்றாக இருக்கும் தூக்கம் தருகிறது. தினமும் வீட்டின் ஒரு பகுதியில் உறங்கும் இடம் தான் படுக்கை அறை. இந்த படுக்கை அறை வாஸ்து படி எப்படி அமைத்து கொண்டால் நமக்கு நன்மைகள் ஏற்படும் என இங்கு தெரிந்து கொள்ளலாம். வடமேற்கு திசையில் இருக்கும் படுக்கை அறைகளில் திருமண வயதை அடைந்தும் திருமணம் காலதாமதமாகும் பெண்கள் படுத்து உறங்கலாம்.

ஒரு வீட்டில் கணவன் – மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில் மட்டுமே அமைப்பது நல்லது. வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் தம்பதிகள் உறங்கும் படுக்கையறை கட்டாயம் அமைக்கக் கூடாது. வீட்டின் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வடகிழக்குப் பகுதியில் படுக்கையறை அமைத்து பயந்துபடுத்துவது நல்லது.படுக்கையறையில் கட்டில் மற்றும் மெத்தை, படுக்கையைத் தென்மேற்கு மூலையில் போட்டு படுக்கும் வகையில் அமைத்து கொள்ள வேண்டும்.

ஸ்லாப் எனப்படும் உத்திரங்கள் கீழாக கட்டில், மெத்தை அமைத்து அதில் உறங்க கூடாது. இக்காலத்தில் பலரும் அட்டாச்டு பாத்ரூம் எனப்படும் படுக்கை அறையிலேயே குளியலறை,கழிவறை போன்றவற்றை அமைக்கின்றனர். இப்படி குளியல், கழிவறை கட்ட விரும்பும் நபர்கள் படுக்கை அறையின் வடமேற்கு மூலையில் தான் கழிவறை அமைக்க வேண்டும். எந்த இடத்தில் படுக்கை அறை இருந்தாலும், படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.

படுக்கை அறை:

சரியான திசை: படுக்கை அறைக்கு தெற்கு, தென்மேற்கு அல்லது மேற்கு திசைகள் மிகவும் நல்லது.

படுக்கை: தலைவாசலை வடக்கு திசையை நோக்கி வைக்கக் கூடாது. தெற்கு அல்லது மேற்கு திசையை நோக்கி வைப்பது நிம்மதியான தூக்கத்தைத் தரும்.

படிக்கும் அறை:

சரியான திசை: கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி படிக்கும் அறையை அமைப்பது நல்லது. இந்த திசைகள் நல்ல கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்.

மேசை: படிக்கும் மேசையை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி வைப்பது சிறந்தது. படிக்கும்போது இந்த திசைகளை நோக்கி அமர்ந்தால் கல்வி சிறப்பாக அமையும்.

வாஸ்துப்படி இந்த குறிப்புகள் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்!

தம்பதியருக்கான படுக்கையறை வாஸ்து சாஸ்திரம் மற்றும் தூங்கும் திசைக்கான குறிப்புகள்

தம்பதிகள் வீட்டின் உரிமையாளராக இருந்தால், வாஸ்து முறைப்படி அவர்கள் தென்மேற்கு திசையில் அமைக்கபட்ட படுக்கையறையில் உறங்கலாம். புதுமணத் தம்பதியராக இருந்தால் வாஸ்து முறைப்படி அவர்கள் வடமேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை அறையைத் தேர்ந்தெடுக்கலாம். வாஸ்து விதிகளின் அடிப்படையில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள படுக்கையறையை பயன்படுத்தக் கூடாது. இது, பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

மாஸ்டர் படுக்கையறையில் படுக்கையின் நிலையானது வாஸ்து முறைப்படி தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் அமைக்கலாம். ஆனால், இந்த இரண்டு திசைகளுக்கும் இடையில் அமைக்க கூடாது. ஏனெனில், இது உறவு நிலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும், சீரான உறவு நிலைக்கு கணவனது இடது பக்கமே மனைவி உறங்க வேண்டும். மேலும், படுக்கையறையின் வடகிழக்கு திசை அலங்கோலமாக இருக்கக் கூடாது. அறையின் மூலையில் உறங்குவதைத் தவிர்க்கலாம் ஏனெனில், இது அறையைச் சுற்றிலும் நேர்மறை ஆற்றல் பரவுவதை தடுக்கிறது. எனவே, கட்டில் வைக்கபடும் நிலை அக்கட்டிலின் இருபுறமும் போதுமான அளவு இடம் இருப்பதற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

படுக்கையறையில் ஷோ பீஸ் அல்லது கலைப் பொருட்களை வைக்க விரும்பினால், ஜோடி அல்லாத பொருட்கள், அதாவது ஒற்றை விலங்கு அல்லது ஒரே ஒரு பறவை போன்ற கலைப் பொருட்களை வைக்க வேண்டாம். அவற்றுக்கு பதிலாக ஜோடி புறாக்கள் அல்லது லஷ்மி தேவி நாராயணர் கடவுள் தம்பதிகள் போன்று ஜோடிகளாக உள்ள கலைப் பொருட்களை வைக்கலாம்.

படுக்கையறையில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டுமெனில், வாஸ்து முறைப்படி போர்க் காட்சிகள், அரக்கர்கள், ஆந்தைகள், பருந்துகள், கழுகுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் படங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மான்கள், அன்னப் பறவைகள், கிளிகள் ஆகியவை அடங்கிய படங்களை வைக்கலாம். மேலும், நல்ல நினைவுகளை நினைவூட்டும் வகையிலான படங்கள், குடும்பத்துடன் உல்லாசப் பயணங்களில் எடுத்த படங்கள், நினைவுப் பரிசுப் பொருட்கள், நிக்-நாக்ஸ் ஆகியவற்றை வைப்பதன் மூலம் அந்த நல்ல நேரங்களை நினைவூட்டுவதாக அமையும். சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு தம்பதியர்கள் படுக்கையறையில் ஜோடியல்லாத தனித்து உள்ள கலைப் பொருட்களை வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக அன்பை வெளிப்படுத்தக்கூடிய விதமாக இரு இதயங்கள் இணைந்தவாறு உள்ள படங்கள், வாத்துகள், லவ் பேர்ட்ஸ், புறாக்கள், ராதாகிருஷ்ணன் படம் போன்றவற்றை வைக்கலாம். புதுமணத் தம்பதிகளின் படுக்கையறையில் மார்பிள் தரையை அமைப்பதை தவிர்க்கலாம்.

நல்ல உறக்கத்தின் முக்கியத்துவம்

மனித உடலுக்கு பல்வேறு காரணங்களால் நல்ல உறக்கம் தேவை. முதலில், நல்ல தூக்கம் மூலம் மூளையின் செயல்பாடும்,  மனநிலையின் லெவல்களும் மிகச் சிறப்பாக ஆகிறது. இதனால், ஒருவர் தனது தினசரி வேலைகளில் ஃபிரெஷ்ஷாகவும் ஆக்டிவாகவும்  செயலாற்ற முடிகிறது. இதன் மூலம், ஒருவரால் தனது வேலைகளில் நல்ல கவனம் செலுத்தி, உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்  முடிகிறது. மேலும், நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நல்ல தூக்கம் தேவைப்படுகிறது. இதன் மூலம் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய்கள் அண்டாதவாறு வைக்க உதவுகிறது. அத்துடன், இரவில் உங்களுக்கு சரியாக தூக்கம் வராமல்  எழுகிறீர்கள் என்றால், உங்கள் படுக்கை அறையை வடிவமைப்பை வாஸ்து வழிகாட்டுதல்கள்படி மாற்ற வேண்டியது அவசியம்.

Vastu tips for bedroom design

“பொதுவாக, படுக்கையறையை தென்மேற்கு திசையில் அமைத்தால் குடும்ப உறுப்பினர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் செல்வச் செழிப்பையும் அளித்து நீண்ட ஆயுளையும் அளிக்கிறது. வீட்டின் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் படுக்கையறை அமைப்பதை தவிர்க்கலாம். தென் கிழக்கு திசையில் படுக்கையறை அமைப்பது வாஸ்து முறைப்படி தம்பதிகள் இடையே சண்டையை ஏற்படுத்தும். அதேபோல் வடகிழக்கில் படுக்கையறை அமைத்தால் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வீட்டின் கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் குழந்தைகளுக்கான படுக்கையறை அமைப்பது சிறந்தது” என்று பர்மர் கூறுகிறார்.

மேலும், வடக்கு திசையில் படுக்கையறை அமைப்பது அனைவருக்கும் அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, வேலை அல்லது வியாபார வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதேபோல், கிழக்கு திசையில் உள்ள படுக்கையறையில் வசிக்கும் மாணவர்களுக்கு நல்ல புத்திகூர்மையையும் கல்வியில் சிறந்து விளங்கும் ஆற்றலையும் கொடுக்கிறது.

படுக்கையறையின் கட்டில் எப்போதும் செவ்வக வடிவில் அல்லது சதுர வடிவில் இருக்க வேண்டும். வட்ட வடிவம் மற்றும் ஓவல் வடிவ கட்டில்களை தவிர்க்கலாம். வாஸ்து முறைப்படி இரட்டை படுக்கை கட்டிலில் இரண்டு தனித்தனி மெத்தைகளுக்கு பதிலாக ஒரே மெத்தையை (டபுள் சைஸ்) பயன்படுத்த வேண்டும். மேலும், மரத்தாலான கட்டில் பயன்படுத்த வேண்டும்.

படுக்கையறையை எப்போதும் வீட்டின் மையப் பகுதியில் அமைக்கக் கூடாது. இப்பகுதி ஆற்றலின் மூலமான பிரம்மஸ்தானம் என்று கருதப்படுகிறது. இந்த மையப்பகுதி ஒரு நிலையான அதிர்வலையைக் கொண்டுள்ளது. இதனால் இங்கு படுக்கையறையை அமைத்தால் படுக்கையறையின் அடிப்படை தன்மையான ஓய்வு நிலைக்கு எதிராக இந்த அதிர்வெண் செயல்படும்.

தம்பதியரிடையே இணக்கமான உறவு ஏற்பட வாஸ்து முறைப்படி மனைவி, கணவனின் இடது பக்கம் உறங்க வேண்டும்.

வாஸ்துப்படி உறங்குவதற்கு உகந்த திசை

உறங்கும்போது கால் பகுதி இருக்க வேண்டிய திசை பயன்கள்
கிழக்கு நற்பெயரும் செல்வ வளமும்
மேற்கு நல்லிணக்கமும் ஆன்மிகமும்       
வடக்கு அதிர்ஷ்டமும் ஐஸ்வரியமும்

  • தெற்கு திசையில் தலை வைத்து தூங்குதல்: நிம்மதியான ஆழ்ந்த
    தூக்கம், மேம்பட்ட உற்பத்தித்திறன், சொகுசு மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதால் வர்த்தகம் அல்லது மற்ற எந்த ஒரு தொழிலிலும் உள்ளவர்களுக்கு இந்தத் திசை உகந்தது . இது இதய நோய் உண்டாவதன் அபாயத்தையும் குறைத்து நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.t
  • கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குதல்: தூங்குபோது
    தலைவைத்து படுக்க அடுத்ததாக ஒரு சிறந்த திசை
    கிழக்குத்திசையாகும். இந்தத் திசையில் தலை வைத்து படுக்க
    மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு
    பரிந்துரைக்கப்படுகிறது. கிழக்கு திசையில் தலை வைத்து உறங்குவது கவனக்குவியத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும். இது வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்புகளையும் ஈர்க்கிறது. இந்த கொள்கையின் அடிப்படையில் குழந்தைக்கான ஒரு அறையை நீங்கள் வடிவமைத்துக்கொள்ள முடியும்.
  • மேற்கு திசையில் தலை வைத்து தூங்குதல்: தெற்கு அல்லது கிழக்கு
    திசையில் தலை வைத்து உறங்க சாத்தியம் இல்லாதபோது, மேற்கு
    திசையை நோக்கி தலை வைத்து உறங்குவது நல்லது. புகழ், அங்கீகாரம் மற்றும் செல்வத்தைக் வழங்கி ஒரு தனிநபருக்குப் பயனளிக்கிறது.
  • அறையின் மூலைக்கு நேரெதிராக அல்லது மூலையின் மையத்தை
    நோக்கி தலை வைத்து தூங்குதல்: தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் தலை வைத்து தூங்குவது மூலையில் நேரதிரான திசையில் அமைந்த படுக்கையறைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி தூங்குவதும் சாதகமான மற்றும் சம நிலையான தூக்கத்தைத் தரும்.