எல்லா துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி..? மு.க.ஸ்டாலின்..!!

 
Q

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கையசைத்து விளம்பரம் தேடுவதற்காக முதலமைச்சர் விஜய் புறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த புரிதல் இல்லாமல் முதலமைச்சர் செயல்படுவதாகவும் சாடியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தமிழகத்தின் வளர்ச்சி தேசிய சராசரிக்கும் கீழே சென்றுள்ளதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில்,

1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த 

@Guidance_TN

 அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.