ஆன்லைனில் பூத் ஸ்லிப் பெறுவது எப்படி..? இதோ சில எளிய வழிமுறைகள்..!
பூத் ஸ்லிப்பை டவுன்லோடு செய்யும் முறை;
* இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளம் voters.eci.gov.in அல்லது electorsearch.eci.gov.inஎன்ற முகவரியில் உள் நுழையவும்.
• தேர்தல் கமிஷன் இணையதளத்தின் முகப்பில் உள்ள Search in Electoral Roll என்பதை தேர்ந்து எடுக்கவும்.
• வாக்காளர்கள் பற்றிய தகவல்களை தேட அல்லது அறிந்து கொள்ள அங்கே 3 வழிகள் திரையிடப்பட்டு இருக்கும்.
1. விவரங்கள் மூலம் (Search By Details): உங்கள் பெயர், தந்தை பெயர், வயது, மாவட்டம், சட்டசபை தொகுதி மாநிலம் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தேடலாம்.
2. வாக்காளர் அடையாள அட்டை மூலம் தேடுதல்(Search by EPIC); வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிட்டு உள்ள இலக்கங்களை பதிவிட்டு தேடலாம்.
3. செல்போன் எண் மூலம்(Search By Mobile number); வாக்காளர் அட்டையில் நீங்கள் ஏற்கனவே இணைத்துள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்து தேடலாம்.
மேற்கண்ட 3 வழிகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து, சரியான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் திரையில் ஒளிரும் ரகசிய குறியீட்டை(Captcha) டைப் செய்து தேடுதல்(search) பட்டனை அழுத்தவும்.அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்த அடுத்த சில வினாடிகளில் உங்களின் விவரங்கள் முழுமையாக திரையில் தோன்றும்.Print Voter Information Slip அல்லது View Detailள என்பதை க்ளிக் செய்தவுடன், உங்களின் பூத் ஸ்லிப் PDF வடிவில் டவுன்லோடு ஆகும். அதனை நீங்கள் பிரிண்ட் எடுத்து எளிதாக பயன்படுத்தலாம்.

