வீட்டில் இருந்தபடியே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வழங்கும் நடைமுறைகளில் பல முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கொடுப்பதல் முதல் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது வரை நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தியுள்ளது.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்றால் https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டுக்கு சென்று வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்பாக உங்களிடம் மொபைல் எண், வீட்டுவரி ரசீது, ஆதார் கார்டு, குடும்ப தலைவரின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் வடிவில் தயாராக இருக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் https://www.tnpds.gov.in/ வெப்சைட்டுக்கு சென்று புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அங்கே கேட்கப்படும் குடும்ப தலைவர், அவரின் புகைப்படம் மற்றும் உறுப்பினர்களுக்கான விவரங்களை பூர்த்தி செய்யவும்.
அதன்பிறகு அட்டை வகைகைய கவனமாக தேர்வு செய்யுங்கள். அதற்கு அடுத்தபடியாக குடியிருப்பு சான்று ஆவணத்தை டிஜிட்டல் வடிவில் பதிவேற்ற வேண்டும். எரிவாயு விவரங்களை பூர்த்தி செய்து, ஓகே கொடுத்தால் உங்களின் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் அரசுக்கு சென்றுவிடும்.
அதிகாரிகள் உங்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்துவிட்டு, கள ஆய்வு மற்றும் நேரடி விசாரணை மூலம் அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்துவார்கள். அதன்பின்பு உங்களின் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஏற்கப்படும். இதற்கான நடைமுறை குறைந்தபட்சம் 15 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை கூட ஆகலாம். சில நேரங்களில் ஒரு வருடம் கூட ஆகும்.
இப்போது தேர்தல் சமயம் என்பதால் உங்களின் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். அதேபோல் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரை சேர்ப்பதில் இப்போது அரசு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
அதாவது, உறுப்பினர் பெயரை சேர்ப்பதை ஆதார் எண் பதிவு அடிப்படையில் மிகவும் எளிமைப்படுத்தியுள்ளது என்று கூட சொல்லலாம். ஆம், https://www.tnpds.gov.in/ வெப்சைட்டுக்கு சென்று புதிய உறுப்பினர் பெயரை சேர்க்க என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
அங்கு, உறுப்பினர் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்து, அவரின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். ஆதார் எண்ணில் இருக்கும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபிஐ உள்ளிட்டால் உங்களின் விண்ணப்பம் அரசுக்கு சென்றுவிடும்.
அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் புதிய உறுப்பினர் பெயர் உங்கள் ரேஷன் கார்டில் சேர்க்கப்பட்டு விடும். ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் புதிய உறுப்பினர் சேர்ப்பதை தமிழ்நாடு அரசு மிகவும் எளிமைப்படுத்தியிருப்பதே இப்போதைய லேட்டஸ்ட் அப்டேட் ஆகும்.

