#BREAKING மதுரை தனிஷ்க் நகைக் கடையில் எவ்வளவு கொள்ளை? - வெளியான பகீர் உண்மை

 
s

மதுரை பைபாஸ் தனிஷ்க் ஜுவல்லரி நகை கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. 

மதுரை பைபாஸ் பகுதியில் உள்ள டாடாவின் தனிஷ்க் நகைக் கடையில் அதிகாலை 3 மணியளவில், ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அண்மையில் திறக்கப்பட்ட கடையின் பின்புறம் வழியாக நுழைந்த முகமூடி அணிந்த மர்மநபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் இன்று காலை செய்திகள் வெளியானது. 

இந்நிலையில் மதுரை தனிஷ்க் நகைக் கடையில் 15 கிலோ தங்கம் கொள்ளை என நிர்வாகம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 3 கிலோ வைர நகைகளும் கொள்ளை என புகாரளித்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  கொள்ளை நடந்த நகைக்கடையில் தடயஅறிவியல் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ள நிலையில், கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகிறது.