ரூ.1 லட்சம் FD போட்டால் போஸ்ட் ஆபிஸில் வட்டி எவ்வளவு கிடைக்கும்?
அஞ்சலக FD தற்போது 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு பல்வேறு வட்டி விகிதங்களை சலுகைகள்:
- 1 ஆண்டு - 6.9%
- 2 ஆண்டு - 7.0%
- 3 ஆண்டு - 7.1%
- 5 ஆண்டு – 7.5% (அதிகபட்சம்)
நாட்டின் பல வங்கிகளில் FD வட்டி இதைவிட குறைவாக இருப்பதால், இது சேமிப்பாளர்களைக் கவரும் முக்கிய காரணமாக உள்ளது.
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம்
நீங்கள் அஞ்சலகத்தின் 5 ஆண்டு டெர்ம் டெபாசிட்டில் ரூ.1,00,000 முதலீடு செய்தால்:
- வட்டி விகிதம்: 7.5%
- முதிர்வுத் தொகை: ரூ.1,44,995
- மொத்த வட்டி: ரூ.44,995
அதாவது, 1 லட்சம் முதலீடு செய்பவருக்கு 5 ஆண்டுகளில் சுமார் ரூ.45,000 வருமானம் அரசு உத்தரவாதத்துடன் கிடைக்கும். நீண்டகால, ஆபத்தில்லா முதலீட்டை விரும்புவோருக்கு இது சரியான தேர்வாகும்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- குறைந்த முதலீடு: ரூ.1,000
- அதிகபட்ச வரம்பு: இல்லை
- ஒருவரோ அல்லது மூவர்வரை கூட்டு கணக்கோ திறக்கலாம்
- 5 ஆண்டு TD-க்கு உயர்ந்த 7.5% வட்டி
- அரசின் முழு பாதுகாப்பு & உறுதியான வருமானம்
பாதுகாப்பான, நிரந்தரமான, மற்றும் வங்கி FD-க்கு மாற்றாக சிறந்த லாபம் தரும் சேமிப்பு திட்டம் தேடினால், அஞ்சலக டெர்ம் டெபாசிட் நிச்சயமாக சிறந்த தேர்வு ஆகும்.


