உங்க பேர்ல எத்தனை சிம் இருக்கு? ஈசியா செக் பண்ணலாம் வாங்க..!

 
1

ஒரு தனிநபர் ஏற்கனவே தனது பெயரில் 9 மொபைல் இணைப்புகளை வைத்திருந்தால், அவருக்கு புதிய சிம் கார்டு வழங்கப்படாது. 

இந்தியாவில் ஒருவர் பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் (ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 6 சிம் கார்டுகள்) மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற விதியைத் தொலைத்தொடர்புத் துறை மேலும் கடுமையாக்கியுள்ளது.


ஆகஸ்ட் 24 முதல், ஏற்கனவே 9 சிம் கார்டுகளைத் தங்களின் பெயரில் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய சிம் கார்டுகளை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய சிம் கார்டு வாங்கும் போது முந்தைய எண்களைக் குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபரும் தனது பெயரில் எத்தனை சிம் கார்டு உள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற வலைத்தளத்தில் சென்று தற்போது நீங்கள் உபயோகிக்கும் மொபைல் எண்ணையும், அங்கு இருக்கும் captcha வையும் கொடுத்தால் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை கொடுத்த பின்னர் அடுத்த பக்கத்தில் உங்களது பெயரில் எத்தனை சிம் கார்டு உள்ளது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

இதில் எதாவது ஒரு மொபைல் எண் உங்களுடையது அல்ல என்பதை கண்டறிந்தால் உடனே அருகில் உள்ள not my number என்பதை க்ளிக் செய்து report செய்து அந்த நம்பரை முடக்கி விடலாம்.

அதே போல் ஏற்கனவே இருந்த எண் தற்போது தேவையில்லை என நீங்கள் நினைத்தால் அருகில் உள்ள not required ஐ க்ளிக் செய்து அதே போல் ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.