எத்தனை போராட்டக்காரர்கள்குரல்களை பா.ஜ.க.வால் ஒடுக்க முடியும்? பா.ஜ.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி..!!
Oct 14, 2026, 12:08 IST1791959896855
தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பா.ஜ.க. அரசாங்கத்தால் எத்தனை போராட்டக்காரர்களை கைது செய்ய முடியும்? எத்தனை இளைஞர்களின் குரல்களை பா.ஜ.க.வால் ஒடுக்க முடியும்?
அவர்கள் எவ்வளவு அதிகமான இளைஞர்களை சிறையில் அடைக்கிறார்களோ, அவ்வளவு அதிகமான அரசியல் சார்பற்ற சாதாரண குடிமக்கள் வீதிகளில் இறங்கி, மக்களின் உண்மையான சக்தியை அவர்களுக்கு காட்டுவார்கள்.
அஷுடோஷ் ராங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோருக்கு எங்கள் ஆதரவு உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து சட்டப் பிரதிநிதித்துவத்தையும், ஆதரவையும் வழங்க தி.மு.க. தயாராக உள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

