இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி!
திமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீர்கள் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்கிறார் என்றும், தேர்தல் பிரச்சாரத்துக்கு போன போது, சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கலாமே? என்றும் அவர் வினவியுள்ளார்.
கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே? என்றும், நீங்க தான் ரொம்ப தில்லான ஆள் ஆச்சே என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
— K.Annamalai (@annamalai_k) May 15, 2026
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு… https://t.co/H7gfxDl6Pe pic.twitter.com/FfbkR6vnbI

