பழனி கோயிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
பழனி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 67 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை வருகின்றனர். பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியல் காணிக்கைகள் கோயில் ஊழியர்களால் தரம் பிரித்து மாத மாதம் எண்ணப்படுகிறது. உண்டியலில் கிடைத்த நகைகளை பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தநிலையில் பயன்படுத்த இயலாத தங்க நகைகளில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்களை நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்யவும், வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் 4 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரத்து 356 ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது. 1069 வெளிநாட்டு கரன்சிகள், 1012 கிராம் தங்கம், 17062 கிராம் வெள்ளி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.