நாட்டில் முதல்வர்கள் மீது உள்ள குற்ற வழக்குகள் எத்தனை? நம் முதல்வருக்கு எந்த இடம்?

 
vijay

நாட்டில் 14 மாநில முதல்வர்களுக்கு எதிராக தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எம்பி, எம்எல்ஏக்கள், மாநில முதல்வர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அதன்படி, நாட்டில் உள்ள 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மக்களவை எம்பிக்கள் 543 பேரில் 251 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 170 பேர் (31%) மீது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான கடும் குற்ற வழக்குகள். மாநிலங்களவை எம்.பி.க்கள் 233 பேரில், 75 பேர் (33%) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய கடும் குற்ற வழக்குகள். மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பொறுத்தவரை, மேற்கு வங்கத்தில் 58% பேருக்கு எதிராகவும், கேரளத்தில் 57%, ஆந்திரத்தில் 56%, தெலங்கானா 49% உறுப்பினர்ளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.


அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள பட்டியலில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முதலிடத்தில் உள்ளார்.அவர் மீது 89 வழக்குகள் உள்ளன. குறைந்த வழக்குகள் நிலுவையில் உள்ள பட்டியலில் ஒடிசா,சிக்கிம்,பஞ்சாப், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் உள்ளனர். அவர்கள் மீது ஒரே ஒரு வழக்கு மட்டுமே உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.