எத்தனை நாள் தான் தப்பிக்க முடியும்? கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி சிக்கினார்..!

 
1

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ராகவன் என்பவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூன் மாதம் ராகவன் கோவை மத்திய சிறையில்ற இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை முடிந்து கோவை திரும்பும் வழியில் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பச்சாக்கவுண்டனூர் பகுதியில் இருந்து ராகவன் தப்பி ஓடினார்.

இதனையடுத்து கர்நாடக மாநில போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்னூர் போலீசார் ராகவனை தேடி வந்தனர். இந்நிலையில் பவானி சாகர் பகுதியில் ராகவன் தலைமறைவாக இருப்பது அன்னூர் போலீசாருக்கு தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் அங்கு சென்ற அன்னூர் போலீசார் ராகவனை விரட்டிச் சென்று கைது செய்தனர்.

​கைது செய்யப்பட்ட ராகவனை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க கோவை அழைத்து வரப்பட்டார்.

கோவை மத்திய சிறை வளாகத்தின் முதல் கேட்டை கடந்தவுடன், ராகவனுக்கு அணிவிக்கபட்டு இருந்த கைவிலங்கை காவல் துறையினர் அகற்றினர். அப்போது கைதி ராகவன் போலீசாரை ஏமாற்றிவிட்டுத் திடீ்ரென தப்பி ஓடினார்.

​அங்கு இருந்த காவலர்கள் உடனடியாக அவரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற போதிலும், கைதி ராகவன் தப தலைமறைவாகிவிட்டார். கோவை மத்திய சிறை வாளாகத்திற்குள் கைதி தப்பியோடிய சம்பவம் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கைதி தப்பிச்செல்லும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததாக நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராகவனை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் வசித்து வரும் பகுதியான பவானிசாகரில் ராகவன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் ராகவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் கோவை அழைத்து வருகின்றனர்.