“ஆளுநருக்கு எவ்வளவு கொழுப்பு? திமிரு?.. நீங்க வெறும் போஸ்ட் மேன்” - துணை முதல்வர் உதயநிதி காட்டம்..
ஆளுநர் ஆர்.என்.ரவி வெறும் தபால்காரர் தான் என்றும், அவருக்கு எவ்வளவு கொழுப்பு, திமிரு இருக்க வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பேசியுள்ளார்.
சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அந்த விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரியை விடுத்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி , வெறும் போஸ்ட் மேன் தான் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, “ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள், எவ்வளவு திமிரு? எவ்வளவு கொழுப்பு? ஆளுநர் அவர்களே நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீங்கள் மக்கள் பிரதிநிதியா?? அல்ல நீங்கள் ஒரு போஸ்ட் மேன் மட்டுமே. எங்கள் முதலமைச்சர் சொல்வதை ஒன்றிய அரசிடம் கொடுப்பது மட்டுமே உன்கள் வேலை..
நீங்கள் ஒரு தபால்காரர்.. மரியாதை கொடுத்தால் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். அவர் பெயர் ஆர்.என்.ரவி அல்ல.. ஆர்.எஸ்.எஸ். ரவி.. உங்களுடைய சித்தாந்தங்களை எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சென்று சொல்லிப்பாருங்கள்.. செருப்பை கழட்டி அடிப்பார்கள்” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.
அண்ணே @Udhaystalin
— Madurai S Bala (@slbala) October 19, 2024
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏 pic.twitter.com/HsmP3DDM8A


