பெரியாரை இழிவாக பேசிவிட்டு எப்படி எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள்?- சீதாலட்சுமியிடம் வாக்குவாதம்

பெரியாரை இழிவாக பேசிவிட்டு எப்படி எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள்.? என ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் திமுக பெண் நிர்வாகி கேள்வி எழுப்பினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி அன்னை சத்யா நகர் பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடமும் அவர் தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரை நிறுத்தி தனக்கு வாக்களிக்க வேண்டும் என சீதாலட்சுமி வேண்டுகோள் விடுத்த போது, வாகனத்தில் வந்த அந்த பெண் பெரியாரைப் பற்றி பேசிவிட்டு எப்படி இந்த பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
பரப்புரைக்கு வந்த நாதக வேட்பாளரிடம் சீமானின் ‘பெரியார்’ விமர்சனம் குறித்து திமுக நிர்வாகி சசிகலா கேள்வி எழுப்பிய நிலையில், வேட்பாளர் சீதாலட்சுமியும் அவரது ஆதரவாளர்களும், “கண்டிப்பாக வேறொரு தருணத்தில் நேரில் விரிவாக விளக்கம் கொடுக்கிறோம்” எனக்கூறி சமாதானப்படுத்தி உள்ளனர்.#NTK |… pic.twitter.com/jHNL9VaRAw
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 21, 2025
அப்போது குறிக்கிட்டு பதிலளித்த வேட்பாளர் சீதாலட்சுமியின் கணவர், பெரியாரைப் பற்றிய ஆயிரம் புத்தகங்கள் தனது வீட்டில் இருப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதற்கு இது உகந்த இடம் இல்லை உங்கள் வீட்டிற்கே வந்து தேர்தலுக்குப்பின் வேட்பாளர் இது தொடர்பாக உங்களுக்கு விளக்கம் அளிப்பார், உங்கள் தொடர்பு எண்ணை தாருங்கள் என அவர் பதில் அளித்தபடி கடந்து சென்றனர்.
வாகனத்தில் வந்த பெண் சசிகலா அந்த பகுதியின் திமுக மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.