அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்னை வரும் – அண்ணாமலை கேள்வி!

 
annamalai

தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் எப்படி வரும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்ற என தெரிவித்துள்ளார்.

அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை என அண்ணாமலை கூறியுள்ளார்.