குக்கருக்குள் கஞ்சா- காட்டிக்கொடுத்த விசில் நறுமணம்...

 
க்ஷ்ட்

கேரளாவில் போலீசாரிடம் இருந்து தப்ப கஞ்சாவை குக்கருக்குள் மறைத்து வைத்த நபர், குக்கர் விசிலடித்த போது வெளிவந்த வாசனையால் சிக்கினார்.

குன்னம்குளம் அருகே கஞ்சா பதுக்கல் தொடர்பாக பினீஷ் என்பவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். போலீஸ் வருவதை முன்னரே அறிந்த பினீஷ், அடுப்பில் இருந்த குக்கரில் கஞ்சா பாக்கெட்டை பதுக்கியுள்ளார்.  தொடர்ந்து, கஞ்சா இருப்பதை கண்டறிய முடியாமல் திணறிய போலீசார், சாதம் வைக்கப்பட்டிருந்த குக்கர் விசிலடித்த போது வந்த வாசனையால் சந்தேகமடைந்து அதனை திறந்து பார்த்தனர். அப்போது குக்கரில் இருந்த 401 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பினீஷை கைது செய்தனர்.

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை ஒட்டி, ஜூன் 1 அன்று 'தூஃபான் நடவடிக்கை: போதைப்பொருள் வேட்டை' தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடங்கப்பட்ட ஆறு நாட்களில், போதைப்பொருட்களை வைத்திருந்த அல்லது கடத்திய குற்றத்திற்காக காவல்துறை 231 பேரைப் பதிவு செய்து, 241 பேரைக் கைது செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 110 கிராம் எம்டிஎம்ஏ, 15.591 கிலோகிராம் கஞ்சா மற்றும் 149 கஞ்சா பீடிகள் அடங்கும்.

.