இல்லத்தரசிகள் ஷாக்..! திடீரென உயர்ந்த காய்கறி விலை..!

 
1 1

கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ், இன்று 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் 10 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி கேரட்  70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் விலை 20 ரூபாய் உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முள்ளங்கி விலை 30 ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 10 ரூபாய் அதிகரித்து 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையடுத்து உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கும், வரி கத்திரிக்காய் 18 ரூபாய் அதிகரித்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுரக்காய் 20 ரூபாய் அதிகரித்து 40 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 5 ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 10 ரூபாய் அதிகரித்து 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.காலி பிளவர் 30 ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 15 ரூபாய் அதிகரித்து 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அவரைக்காய் 40 ரூபாய் அதிகரித்து 80 ரூபாய்க்கும், மஞ்சள் பூசணி ஒரு கிலோ 10 ரூபாய் அதிகரித்து 30 ரூபாய்க்கும், வெள்ளை பூசணி 5 ரூபாய் உயர்ந்து 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பீர்க்கங்காய் 20 ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கும், கோவைக்காய் 15 ரூபாய் அதிகரித்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொத்தவரங்காய் 15 ரூபாய் அதிகரித்து 40 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒரு ரூபாய் அதிகரித்து 9 ரூபாய்க்கும் விற்கின்றனர்.

காய்கறி விலைக்கு போட்டியாக மளிகைப் பொருட்களும் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. சமையல் எண்ணெய் 155 ரூபாய்க்கும், துவரம்பருப்பு 125 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.