வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு - இன்று முதல் அமல்

 
cylinder

வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை ரூ.400 வரை குறையும். ஒட்டுமொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி வரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


  கேஸ் சிலிண்டர் விலை  உயர்வு

இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைந்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்தது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் ரூபாய் 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைந்து ₹918.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.