குதிரை பேர விவகாரம் - சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி

 
Highcourt

குதிரை பேர வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கு மற்றும் புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள், ஊடகங்கள், செய்தித்தாள்களில் வெளியான செய்தியை கொண்டு புலன் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற முடியாது என்றும் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. குதிரை பேரம் நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகார் மீது மட்டும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறது, மற்ற புகார்களை காவல்துறை ஆரம்பகட்ட முகாந்திரம் இல்லை எனக் கூறிய நீதிபதிகள்,  பொதுநல வழக்கு சக்தி வாய்ந்த ஆயுதம். செய்தி அடிப்படையில் விசாரணையை வேறொரு அமைப்பிற்கு மாற்ற முடியாது. சமூகத்தில் குரலற்றவரின் குரலாகவே பொதுநல வழக்குகள் விளங்கி வருகிறது என்றும் கருத்து கூறினர்.