சாலை அகலப்படுத்தும் பணியில் நடந்த கோர விபத்து..!!ரோட்ல போயிட்டு இருந்த டீச்சர் உட்பட 5 பேரை பலி வாங்கிய கோர விபத்து!
அலூரி மாவட்டம், அனந்தகிரி மண்டலம், பினாக்கோட்டா பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிக்காகப் பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் வெடித்த விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.
இங்கு சாலைப் பணிகளுக்காக ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்த அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத சக்திவாய்ந்த வெடிப்பு இந்த விபட்டை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் ஓட்டுநர், மூன்று தொழிலாளர்கள் மற்றும் அவ்வழியாகப் பயணம் செய்த ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்தனர். பலியானவர்களில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆசிரியர் சுனிதா, தேவப்பள்ளியைச் சேர்ந்த மணி, சீடகாடாவைச் சேர்ந்த நாராயண ராவ் மற்றும் கடப்பாப் பகுதியைச் சேர்ந்த பவன் குமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐந்தாவது நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

