கலைஞர் நினைவிடத்திற்கு விசிட் அடித்த முதலமைச்சர் - காரணம் இதுதான்!!

 
tn

அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 3 ஆண்டு நிறைவு செய்து, 4ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது.  கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. கடந்த 2021 மே 7ஆம் தேதி முதல்வராக முதல் முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார்.  இந்த மூன்றாமாண்டு திமுக ஆட்சி காலத்தில்,  அரசு பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ,பள்ளிகளில் காலை உணவு  என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. 


 

tn

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று  மூன்றாம் ஆண்டு நிறைவடைந்து நான்காம் ஆண்டில்  அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் மரியாதை செலுத்தினார்.