கல்லூரி மாணவிகளிடையே ஏற்பட்ட ஓரினச்சேர்க்கை! பறிபோன உயிர்
ஓரினச் சேர்க்கையின்போது ஒன்றாக இருந்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி தோழி மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் பகுதி கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
![]()
கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் பகுதியைசேர்ந்த 18 வயது மாணவி கடலூர் அருகே உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரும் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் தோழிகள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த 18 வயது மாணவியின் அண்ணன் தனது தங்கையை கண்டித்ததுடன், இதுபற்றி 20 வயது மாணவியின் அண்ணனிடம் கூறி அறிவுரை கூறுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் 18 வயது மாணவி, 20 வயது மாணவியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இதில் ஆத்திரமடைந்த 20 வயது மாணவி, தனது தோழியை தொடர்பு கொண்டு தன்னுடன் பேசாவிட்டால் நாம் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 18 வயது மாணவி நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனிடையே மேற்கண்ட சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட 18 வயது மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தன்னுடைய உயிரிழப்பிற்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மாணவி தான் காரணம் என்று தெரிவித்துள்ள நிலையில் அந்த மாணவியை போலீசார் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


