இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
rain school

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும் இதை மேலும் வட மேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்பதாலும் இன்று ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி ,கன்னியாகுமரி, கடலூர் ,விழுப்புரம்,  டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.  இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

school

இந்த சூழலில் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ,நாமக்கல் ,தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் சென்னையிலும் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர்,பட்டினப்பாக்கம், அடையாறு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

schools

இந்நிலையில் புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையிலும், நேற்றிரவு முதல் பெய்து வந்த கனமழை காரணமாகவும் இவ்விரு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களை முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.