காரைக்காலில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை..

 
school


காரைக்கால் மாவட்டத்தில்  இன்று 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இறைதூதர்களில் சிறப்புக்குரியவராக கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லா  நினைவு தர்கா காரைக்காலில் அமைந்துள்ளது.  புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 200ம் ஆண்டு கந்தூரி விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.  இந்த விழாவையொட்டி,  காரைக்காலில் இன்று 1முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

  கந்தூரி விழா

புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி  திருவிழாவை முன்னிட்டு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.