நிபா வைரஸ் எதிரொலி- புதுச்சேரி மாகேவில் செப்.15,16-ல் விடுமுறை

 
school

புதுச்சேரி மாநிலம் மாகேயில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

puducherry

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கேரளாவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவலை அடுத்து, புதுச்சேரி மாகேயில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (15.09.2025 மற்றும் 16.09.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.