கனமழை எதிரொலி- கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், நாளை அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூரில் விட்டுவிட்டு இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிறப்பு கொள்ளாகி உள்ளனர். கடலூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் லாரன்ஸ் சாலை முழுவதும் குளம் போல மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பேருந்து நிலைய சாலையில் ஏராளமான கடைகள் உள்ள நிலையில் உள்ளே மழை நீர் உள்ளே சென்றதால் வியாபாரிகளின் கவலை. பேருந்து நிலைய சாலையில் உள்ள வடிகால் வாய்க்காலை தூர்வாராததால் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.