செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 
school leave

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு  இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை முதல்  ஊத்துக்கோட்டை, பென்னாலுர்பேட்டை பூண்டி, கடம்பத்தூர், பேரம்பாக்கம் மணவாள நகர்  ,வேப்பம்பட்டு, தாமரைப்பாக்கம், திருமழிசை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் நாளை சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.