புதுக்கோட்டையில் 2 தாலுக்காகளுக்கு விடுமுறை

 
pudukottai

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்-ைவடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுந்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

Rain

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம் ,அரியலூர் , தஞ்சை ,நாகப்பட்டினம் ,திருவாரூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டையில் இரண்டு தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக கந்தர்வகோட்டை,  கரம்பக்குடி ஆகிய தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.