காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
school

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேசுவரர் திருக்கோயில் காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் கச்சபேசம் என்றும் அறியப்படுகிறது.

tn

மேலும், கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சத்தியமொழிவிநாயகர் உள்ளார். இவரை, பொய்யாமொழிப் பிள்ளையார் என்றும் வழங்கும். இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். 

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார். கச்சபேஸ்வரர் கோயில் குடமுழுக்கையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்ததால் அப்பகுதி பள்ளிகளுக்கு விடுப்பு விடப்பட்டுள்ளது.