நாளை வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!
Jul 15, 2024, 20:55 IST1721057107087

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடனும், ஒருசில பகுதிகளில் லேசான மழையும், குளிர்ந்த காற்றும் நிலவி வந்தது.கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கன மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துக் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று உத்தரவிட்டு உள்ளார்.