மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா... நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

 
ராஜராஜ சோழன் சதய விழா

தஞ்சாவூர் பெரிய கோயில் என்றால் சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் தான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு புகழ்பெற்ற மன்னராக திகழ்ந்தவர் ராஜராஜ சோழன். அவரின் பிறந்த நாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1036ஆவது சதய விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. மங்கல இசையுடன் தொடங்கும் இவ்விழா ஆண்டுதோறும் இரண்டு நாட்களுக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதய விழா: கரோனாவால் எளிமையாக கொண்டாட  முடிவு | raja raja chozhan - hindutamil.in

இதில் தேவாரப் பாடல்கள் பாடி பூஜைகள் செய்யப்படும். திருமுறை வீதியுலா, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், சிறப்பு சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்தாண்டு ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என பெரிய கோயில் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராஜராஜசோழனின் 1036ஆவது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.