ஹோலி பண்டிகை : தமிழர்கள், வட மாநிலத்தவர்கள் இடையே பிணைப்பை ஏற்படுத்தட்டும் - டிடிவி தினகரன்..

 
ttv

ஹோலி பண்டிகையில் தமிழர்களுக்கும், பிற மாநிலத்தவர்களுக்கும் இடையேயான பிணைப்பும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி, வட இந்தியர்களால்  உற்சாகமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகிழ்ச்சி, அன்பை வெளிப்படுத்தும் விதமாக வண்ணமயமான ஹோலி பண்டிகை கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Holi  -  ஹோலி பண்டிகை

வேற்றுமையில் ஒற்றுமையை போற்றும் பன்முகத் தன்மையை வலியுறுத்தும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் மகிழ்வான தருணத்தில் தமிழர்களுக்கும், பிற மாநிலத்தவர்களுக்கும் இடையேயான பிணைப்பும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.