இன்று திருப்பரங்குன்றம் மலையில் கிரிவலம்: ஹிந்து முன்னணி அழைப்பு..!
Mar 2, 2026, 04:50 IST1772407221000
'திருப்பரங்குன்றத்தில் இன்று தடையை மீறி தீபம் ஏற்றுவோம்' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்ததாக,
அவர் வெளியிட்ட அறிக்கையில், 'திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி தீபம் ஏற்றும் திட்டம் எதுவும் ஹிந்து முன்னணிக்கு இல்லை. லிங்க வடிவில் அமைந்திருக்கும், முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி, இன்று கிரிவலம் செல்வோம் என பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'தடையை மீறி தீபம் ஏற்றுவதாக தகவல் வெளியானால், கிரிவல நிகழ்ச்சிக்கு, அரசு தரப்பில் இருந்து ஏதேனும் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இன்று திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல திட்டமிடப் பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

