"கலவரம் செய்தால்தான் பாஜக காலூன்ற முடியும்"... ஓவரா பேசியவரை அலேக்கா தூக்கிய போலீஸ்

 
"கலவரம் செய்தால்தான் பாஜக காலூன்ற முடியும்"... அலேக்கா தூக்கிய போலீஸ்

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் உடையார் நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் உடையார், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியாகி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதில், உடையார், தமிழ்நாட்டில் 40 இடங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாதது வேதனையாக உள்ளது எனக் கூறுகிறார். மேலும் கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும் எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் பாஜக வளர கலவரம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி உடையார் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து பாளையங்கோட்டை எஸ்.ஐ. துரைபாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் உடையார் நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மத ரீதியான பிரச்சனையை தூண்டுவது, பொது அமைதியை குலைத்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.