இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது!

 
arjun sampath

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

arjun sampath

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்று பெயரில் இன்று கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்க இருக்கிறார். கிட்டத்தட்ட 150 நாட்கள்.  12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக தமிழக வருகை புரிந்துள்ள ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரிக்கு செல்கிறார். கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியிருந்த நிலையில்,  கோ பேக்  ராகுல் என்ற முழக்கத்தோடு போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்தார்.  இது குறித்து கன்னியாகுமரிக்கு அவர் ரயிலில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது

ttn

இந்நிலையில்  ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்ற போது, திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.