பொள்ளாச்சியை தொடர்ந்து பாளையங்கோட்டை! களத்தில் இறங்கிய திமுகவினர்

 
ச்

சமஸ்கிருதம் மற்றும் இந்தியை கல்வி திட்டத்தில் திணிக்கும் மத்திய அரசை கண்டித்து நெல்லை பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருக்கும் பாளையங்கோட்டை என்ற ஹிந்தி வார்த்தையை கருப்பு மையால் அழித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய கல்விக் கொள்கை மும்மொழி கல்வி திட்டத்தை செயல்படுத்துதல் மூலம் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை படிக்க கட்டாயப்படுத்துவதாக மத்திய அரசைக்  கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.  தமிழகம் முழுவதும் பிரச்சனை பல்வேறு வடிவங்களில் போராட்டங்களாக மாறி வருகிறது. முன்னதாக மத்திய அரசின் அலுவலகமான பாஸ்போர்ட் அலுவலகத்தில் திமுகவினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில் அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


ஆனால் குறித்த நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் வராத திமுகவினர், பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இருந்த பாளையங்கோட்டை என ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை கருப்பு மையால் அழித்து ஹிந்தி மொழிக்கு எதிராகவும், தமிழ் வாழ்க என்றும் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.