மீண்டும் ஒரு சர்ச்சை- அரசு மருத்துவமனை மாத்திரைக் கவர்களில் இந்தி சேர்ப்பு

 
ச்

மாநில நெடுஞ்சாலைகளில் இந்தி சேர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையாக அரசு மருத்துவமனை மாத்திரைக் கவர்களில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.

Image


கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் மாத்திரைக் கவரில் தமிழ், ஆங்கிலத்துடன், தற்போது இந்தியும் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரை இரு மொழியில் இருந்த விபரங்கள், மும்மொழிக்கு மாறியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தி சேர்ப்பு வட மாநில தொழிலாளர்களுக்காகவா? மற்ற மாநிலங்களில் எப்படி? என்ன சொல்ல போகிறது சுகாதாரத்துறை என்ற அடுக்கடுக்கான கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர். 



இதனை விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, “தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல !முதலில் கரூர்...இப்போது கோவையிலும் அதே நிலமை... மாற்றம் nagee hai 🙅🏿 நாற்றம் hai hai 😤 Hindi hai Why hai🧐 ?!? This is one more துரோகம் hai hai🤦🏾” என விமர்சித்துள்ளார். இதேபோல் திமுக ஐடி விங், “இருமொழிக் கொள்கை என நாடகமாடும் த.வெ.க அரசின் மருந்துக்குறிப்பு:  உணவுக்கு முன், உணவுக்கு பின், காலை மதியம் மாலை இரவு என தினமும் நான்கு வேலையும் இந்தி எடுத்துக்கொள்ள வேண்டும்! #TVKFailsTN” எனக் குறிப்பிட்டுள்ளது.

Image

இதனிடையே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மாத்திரை கவர்கள், டிசம்பர் 2025-ல் ஈரோடு கூட்டுறவு அச்சகத்தில் அச்சிடப்பட்டவை. மருத்துவமனையின் பெயர் தமிழில் மட்டுமே இருந்த நிலையில், மாத்திரை உட்கொள்ளும் நேரம் குறிப்பிடும் பகுதியில் தவறுதலாக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றுள்ளன. இது கடந்த ஜனவரி 2026 முதல் பயன்பாட்டில் இருந்தது. தற்போது மத்திய சிறையில் இருந்து பெறப்படும், தமிழில் மட்டுமே விவரங்கள் உள்ள கவர்கள் பயன்படுத்தப்படுவதாக தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.