ஐகோர்ட் நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

 
ஐகோர்ட் நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

கடந்த 2023ம் ஆண்டு முதல் சென்னை  உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கங்கபூர்வாலா 2024ம் ஆண்டு மே 23ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவனை மே 24ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் ஒப்புதல் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2013-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மகாதேவன் அவர்கள் கடந்த 11 ஆண்டுகளில் சிறப்பான பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.  தமிழ் மொழி மீது மிகுந்த பற்றும், தமிழ் மொழியில் புலமையும் கொண்ட மகாதேவன், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் 4 ஆண்டுகள் பணியில் இருக்கப் போகும் நீதியரசர் மகாதேவன்.