குணா பட ரீ-ரிலீஸ்க்கு தடை விதித்த ஐகோர்ட்

 
குணா திரைப்படம்

நடிகர் கமல்ஹாசன் நடித்து, 1991ம் ஆண்டு வெளியான குணா படத்தை மறு வெளியீடு செய்ய பட தயாரிப்பு நிறுவனமான  பிரமிட் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குணா மறுவெளியீடாகுமா? கமல் பதில்!

சமீபத்தில் மலையாளத்தில்  மஞ்சுமல் பாய்ஸ் படம் வெளியான பின், நடிகர் கமல் நடித்த குணா படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், படத்தின் முழு உரிமைதாரராக தன்னை அறிவிக்க வேண்டும் எனவும், படத்தை மறு வெளியீடு செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை தெரிவித்து, அத்தொகையை தனக்கு வழங்கும்படி, பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல் முருகன், குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.