வாக்குப்பதிவில் மிரள வைத்த கரூர்!

 
வாக்குப்பதிவில் மிரள வைத்த கரூர்!

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தங்களது வாக்குகளை மும்முரமாக செலுத்திய மக்கள், வரும் மே 4-ஆம் தேதி வரப்போகும் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 84 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்களில் கரூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு 91.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.சேலத்தில் 90.09%, நாமக்கல்லில் 89.39%, ஈரோட்டில் 86.67%, தருமபுரியில் 89.77%, திண்டுக்கல்லில் 88.18%, திருப்பூரில் 88.16%, ராணிப்பேட்டையில் 88.45%, திருவண்ணாமலையில் 87.90%, விழுப்புரம் மாவட்டத்தில் 87.56% வாக்குகளும் பதிவாகியுள்ளன.