திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல அனுமதி
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கோவை மற்றும் பெங்களூர் அதிவிரைவு ரயில் நின்று செல்ல ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
![]()
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கொங்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், திருவள்ளுர் போன்ற இடங்களில் தொழிற்சாலைகளில் பனியாற்றி வருகின்றனர். அதே போன்று திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கொங்கு மாவட்டம் மற்றும் பெங்களூரில் கல்வி நிறுவனங்களில் பயின்றும் இளைஞர்கள் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சென்று தான் பயணிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இது தொடர்பாக தொடர்ந்து ரயில் பயணிகள் தென் மாவட்டங்களில் செல்லும் ரயில்கள் திருவள்ளுர் ரயில் நிலையம் நின்று செல்ல வேண்டுமென பல முறை ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இது தொடர்பாக திருவள்ளுர் எம்பி சசிகாந்த் செந்தில் பாராளுமன்றத்தில் பேசியும் சம்மந்தப்பட்ட ரயில்வே அமைச்சர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்நிலையில் கோயம்பத்தூர்–சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல்–பெங்களூரு டபுள் டெக்கர் விரைவு ஆகிய இரண்டு ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் செய்ய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.


